ஹூஸ்டன் விண்வெளி மையத்தில் அப்பல்லோ 11 நிலவில் தரையிறங்கியதன் 55வது ஆண்டு விழாவை அமெரிக்கா கொண்டாடியது.
மனிதகுலம் ஆனது 1969 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதியன்று நிலவினை அடைந்தது.
விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் விண்கலனில் இருந்து கீழே இறங்கி நிலவின் மேற்பரப்பில் கால் பதித்து வரலாறு படைத்தார் என்ற நிலையில் அவரைத் தொடர்ந்து விண்வெளி வீரர் புஷ் ஆல்டெரின் நிலவில் கால் பதித்தார்.
இருவரும் அடுத்த சில மணி நேரங்களில் நிலவில் மாதிரிகளைச் சேகரித்து, நிலவின் மேற்பரப்பில் அமெரிக்கக் கொடியை நட்டனர்.