TNPSC Thervupettagam
December 27 , 2021 973 days 533 0
  • அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பானது எச்.ஐ.வி நோய்த் தொற்றைப் பெறுவதற்கான ஒரு அபாயத்தைக் குறைப்பதற்காக வேண்டி உலகில் முதல் முறையாக ஊசிமுனை மூலம் செலுத்தக்கூடிய ஒரு மருந்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
  • அப்ரெடியூட் என்பது ஒரு ஊசி வழி மருந்தாகும்.
  • அதன் பொதுப் பெயர் "கேபோட்டோகிரேவிர் என்ற, கால நீட்டிப்புடன் ஊசி வழியே உட் செலுத்தக் கூடிய கலவை" என்பதாகும்.
  • எச்.ஐ.வி தொற்றுநோய்த் தடுப்பிற்கான ட்ருவாடா மற்றும் டெஸ்கோவி போன்ற  தினசரி மாத்திரைகளுக்கு மாற்றாக இந்த மருந்து வழங்கப்படுகிறது.
  • இந்த மாத்திரைகள், பாலியல் ரீதியாக எச்.ஐ.வி தொற்றுநோய்  பரவுவதைத் தடுப்பதில் 99% வரை பயனுள்ளதாக இருக்கும்.
  • இருப்பினும், இது பயனளிப்பதற்கு வேண்டி ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்