TNPSC Thervupettagam

அமலாக்கத்துறை இயக்குநரின் பதவிக் காலத்தின் மூன்றாவது நீட்டிப்பு

July 15 , 2023 374 days 179 0
  • அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் (ED) இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலத்தினை மூன்றாவது முறையாக நீட்டிப்பதாக மத்திய அரசு வழங்கிய ஒரு உத்தரவினை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
  • அதே நேரத்தில் மத்தியப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் மற்றும் அமலாக்கத் துறை இயக்குநரகத்தின் இயக்குநர் ஆகியோரின் பதவிக் காலத்தை அவர்களுக்கான இரண்டு வருட பதவிக் காலத்திற்கு அப்பால் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கும் வகை அதிகாரத்தினை மத்திய அரசிற்கு வழங்குகின்ற டெல்லிச் சிறப்புக் காவல் படை உருவாக்கச் சட்டம் மற்றும் மத்திய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தில் மேற் கொள்ளப் பட்ட திருத்தங்களை உறுதிப்படுத்தியது.
  • பொது நலன் கருதியும் மற்றும் எழுத்துப் பூர்வமாக சில காரணங்களுடன், உயர்மட்ட அதிகாரிகளுக்குப் பதவிக் காலம் நீட்டிப்பு வழங்கலாம்.
  • மிஸ்ரா, ஆரம்பத்தில் அமலாக்கத் துறை இயக்குநரகத்தின் இயக்குநராக இரண்டு ஆண்டு காலத்திற்கு அந்தப் பதவியில் (2020 ஆம் ஆண்டு நவம்பர் வரை) நியமிக்கப் பட்டார்.
  • அவரது பதவிக் காலம் முடிவடைவதற்கு முன், அவருக்கு ஓர் ஆண்டு பதவிக் கால நீட்டிப்பு வழங்கப் பட்ட நிலையில், இதனை எதிர்த்து காமன் காஸ் என்ற தன்னார்வ நிறுவனத்தினால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
  • 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பின் மூலம், அவரது பதவிக் காலம் சுமார் இரண்டு மாதங்களில் முடிவடைவதை அறிந்து அவரதுப் பதவிக் காலத்தின் நீட்டிப்பிற்கு நீதிமன்றம் அனுமதித்தது.
  • இருப்பினும், மிஸ்ராவுக்கு மேலும் எந்தவொருப் பதவிக்கால நீட்டிப்பும் வழங்கப்படக் கூடாது என்று தீர்ப்பில் தெளிவாகக் கூறப்பட்டது.
  • மத்திய அரசானது, 2021 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதியன்று டெல்லிச் சிறப்புக் காவல் படை உருவாக்கச் சட்டம் மற்றும் மத்திய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்தது.
  • இது மத்தியப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் மற்றும் அமலாக்கத் துறை இயக்குநரகத்தின் இயக்குநர் ஆகியோரின் பதவிக்காலத்திற்கு தலா ஓராண்டுக் கால பதவி நீட்டிப்பு வழங்குவதன் மூலம் அந்தப் பதவிகளின் இரண்டு ஆண்டு பதவிக் காலத்திற்கு அப்பால் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க அரசாங்கத்திற்கு வழி வகுத்தது.
  • இத்திருத்தங்களை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்களின் மூலமாக வழக்குத் தொடரப் பட்டன.
  • வழக்குத் தொடரப்பட்ட இந்தச் சட்டத் திருத்தத்தின் கீழ், மிஸ்ரா 2021 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை பதவி நீட்டிப்பு பெற்றார்.
  • கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், அவரது பதவிக் காலம் ஆனது 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப் படுவதாக அறிவிப்பு வெளியானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்