ஒடிசா அரசானது நமது வீடுகளில் LED விளக்குகள் எனப் பொருள்படும் “அமா கரே LED” என்ற மாநிலத்தில் உள்ள 95 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றது.
ஒவ்வொரு பயனாளியின் குடும்பமும் இத்திட்டத்தின் கீழ் நான்கு LED விளக்குகளை இலவசமாக பெற முடியும்.
இந்த LED விளக்குகள் (ஒவ்வொன்றும் 9 வாட்) தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (National Food Security Act - NFSA) மற்றும் மாநில உணவுப் பாதுகாப்புத் திட்டம் (State Food Security Scheme - SFSS) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விநியோகிக்கப்படும்.
விளக்குகளின் விநியோகம் பீத்தா எனப்படும் ஒடிசாவின் திட்டங்களில் வெளிப்படைத் தன்மையையும் பொறுப்புடைமையையும் இயலச் செய்திடும் மக்கள் அதிகாரம் என்ற திட்டத்திலிருந்து (Peoples Empowerment – Enabling Transparency and Accountability of Odisha Initiatives/ PEETHA) ஆரம்பிக்கப்படும்.