அமிலத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு
January 31 , 2018 2492 days 767 0
பணியாளர் மற்றும் பயிற்சித் துறையானது, மதியிறுக்கம், மனநோய், அறிவுத்திறன் குறைபாடு மற்றும் அமிலத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு வேலைகளில் ஒதுக்கீடு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
நேரடி பணிச் சேர்க்கையை பொறுத்த வரையில், மொத்த காலிப் பணியிடங்களில் தற்போது குரூப் A, B மற்றும் Cல் உள்ள 3% இடங்களிலிருந்து மேலும் 4% பணியிடங்கள் அளவீட்டு குறைபாடு (Benchmark disability) கொண்ட மக்களுக்கு ஒதுக்கப்படும்.
அளவீட்டு குறைபாடு (Benchmark disability) என்பது, ஒரு நபர், குறிப்பிட்ட குறைபாட்டிலிருந்து 40%க்கும் கீழ் இல்லாமல் கொண்டிருப்பதாகும்.
பார்வையற்றவர்கள், பார்வைக் குறைபாடுள்ளவர்கள், காது கேளாதோர் மற்றும் கேட்கும் திறன் குறைந்தவர்கள்; இடப்பெயர்ச்சி இயலாமை மற்றும் பெருமூளை வாதம் கொண்டவர்கள், தொழு நோயிலிருந்து குணமடைந்தவர்கள், வளர்ச்சி குன்றியோர், அமிலத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தசைவளக்கேடு போன்றவற்றைக் கொண்டவர்களுக்கு ஒவ்வொரு பதவிக்கும் 1% இடம் ஒதுக்கப்படும்.
இது தவிர, மதியிறுக்கம், அறிவுத்திறன் குறைபாடு, குறிப்பிட்ட கற்றல் குறைபாடு மற்றும் மன(உள) நோய் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கும் ஒவ்வொரு பதவிக்கும் 1% இடம் ஒதுக்கப்படும்.
கற்றல் இயலாமை மற்றும் அமிலத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டினை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள், குறைபாடுகள் கொண்ட நபர்களின் உரிமைகள் சட்டம், 2016 மற்றும் இது தொடர்பான விதிகளின் அறிவிப்புகள் வந்ததன் விளைவாக எடுக்கப்படுகின்றன.
புதிய விதிகளின் கீழ் புகார்களை கவனிப்பதற்காக அனைத்து அரசாங்க அமைப்புகளும் குறைதீர்க்கும் அதிகாரிகளை நியமனம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.