TNPSC Thervupettagam

அமிலத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு

January 31 , 2018 2362 days 689 0
  • பணியாளர் மற்றும் பயிற்சித் துறையானது, மதியிறுக்கம், மனநோய், அறிவுத்திறன் குறைபாடு மற்றும் அமிலத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு வேலைகளில் ஒதுக்கீடு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
  • நேரடி பணிச் சேர்க்கையை பொறுத்த வரையில், மொத்த காலிப் பணியிடங்களில் தற்போது குரூப் A, B மற்றும் Cல் உள்ள 3% இடங்களிலிருந்து மேலும் 4% பணியிடங்கள் அளவீட்டு குறைபாடு (Benchmark disability) கொண்ட மக்களுக்கு ஒதுக்கப்படும்.
  • அளவீட்டு குறைபாடு (Benchmark disability) என்பது, ஒரு நபர், குறிப்பிட்ட குறைபாட்டிலிருந்து 40%க்கும் கீழ் இல்லாமல் கொண்டிருப்பதாகும்.
  • பார்வையற்றவர்கள், பார்வைக் குறைபாடுள்ளவர்கள், காது கேளாதோர் மற்றும் கேட்கும் திறன் குறைந்தவர்கள்; இடப்பெயர்ச்சி இயலாமை மற்றும் பெருமூளை வாதம் கொண்டவர்கள், தொழு நோயிலிருந்து குணமடைந்தவர்கள், வளர்ச்சி குன்றியோர், அமிலத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தசைவளக்கேடு போன்றவற்றைக் கொண்டவர்களுக்கு ஒவ்வொரு பதவிக்கும் 1% இடம் ஒதுக்கப்படும்.
  • இது தவிர, மதியிறுக்கம், அறிவுத்திறன் குறைபாடு, குறிப்பிட்ட கற்றல் குறைபாடு மற்றும் மன(உள) நோய் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கும் ஒவ்வொரு பதவிக்கும் 1% இடம் ஒதுக்கப்படும்.
  • கற்றல் இயலாமை மற்றும் அமிலத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டினை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள், குறைபாடுகள் கொண்ட நபர்களின் உரிமைகள் சட்டம், 2016 மற்றும் இது தொடர்பான விதிகளின் அறிவிப்புகள் வந்ததன் விளைவாக எடுக்கப்படுகின்றன.
  • புதிய விதிகளின் கீழ் புகார்களை கவனிப்பதற்காக அனைத்து அரசாங்க அமைப்புகளும் குறைதீர்க்கும் அதிகாரிகளை நியமனம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்