TNPSC Thervupettagam

அமூரில் பெருங்கற்கால புதைவிடம்

November 6 , 2024 17 days 85 0
  • சென்னை வட்ட இந்தியத் தொல்லியல் துறை (ASI) ஆனது, அமூரில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
  • இது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் அருகே கீழைப் பாலாற்றின் படுகையின் கரையில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்டத் தளமாகும்.
  • ASI ஆனது, 1921 ஆம் ஆண்டில், கீழைப் பாலாறு படுக்கையில் உள்ள அமூர் கிராமத்தில் அமைந்துள்ள 130 ஏக்கர் நிலத்தில் கல் பதுக்கைகள் மற்றும் கற்குவியல்களைக் கொண்ட ஒரு பெருங்கற்காலப் புதைவிடத்தினைக் கண்டறிந்துள்ளது.
  • இந்தப் பண்டைய கால புதைவிடம் ஆனது, 2000 ஆண்டுகள் பழமையானது என கருதப் படுகிறது.
  • 2500 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் சிறுதாவூரில் 2007 ஆம் ஆண்டில் பெருங்கற்கால கல் சவப்பெட்டி, இரும்புப் பொருள்கள் மற்றும் செந்நிற சூதுபவள மணிகள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்