TNPSC Thervupettagam

அமூர் வல்லூறுகள்

November 16 , 2020 1475 days 672 0
  • மணிப்பூர் மாநிலத்தில் அமூர் வல்லூறுகளை வேட்டையாடுதல், விற்பனை செய்தல் மற்றும் வளர்த்தல் ஆகியவற்றைத் தடை செய்வதாக அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • இவை “இந்திய வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1972” என்ற சட்டத்தின் கீழ் பாதுகாக்கப் படுகின்றன.
  • இவை நீண்ட தூரம் இடம்பெயரும் பறவை இனங்களாகும்.
  • இவை ஓய்விற்காக மணிப்பூர் மற்றும் நாகாலாந்திற்கு வருகை புரிகின்றன.
  • இவை குளிர்காலம் துவங்கிய பின்னர் சுமார் இரண்டு மாதங்களுக்கு வடகிழக்கு மாநிலங்களில் தங்கும் சைபீரியப் பறவைகளாகும்.
  • குளிர்காலத்திற்குப் பிறகு, இவை தென்னாப்பிரிக்காவிற்குப் புறப்படுகின்றன.
  • நாகாலாந்தில் உள்ள டோயாங் ஏரியும் இந்தப் பறவைகளுக்கான ஒரு சரணாலயம் ஆகும்.
  • ஆகவே, நாகாலாந்து “உலக வல்லூறுகளின் தலைநகரம்” என்று அழைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்