அமெரிக்காவின் சுயமுயற்சியால் உயர்ந்த பணக்காரப் பெண்
July 21 , 2018 2321 days 648 0
சுயமுயற்சியால் உயர்ந்த அமெரிக்காவின் பணக்கார பெண்களின் வருடாந்திர தரவரிசைப் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.
இப்பட்டியல், அமெரிக்காவில் பரம்பரை சொத்துகளின் உதவியில்லாமல் தங்களது வாய்ப்புகளைத் தானே உருவாக்கிக் கொண்ட முதல் 60 பெண்களின் செல்வத்தினை கணக்கிடுகிறது.
இந்த வருடத்திற்கான பட்டியலைத் தயார் செய்வதற்கு தேவையான குறைந்தபட்ச மொத்த சொத்து மதிப்பு 320 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். கடந்த வருடம் இது 260 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
நாட்டின் மிகப்பெரிய கூரை விநியோக நிறுவனமான ABC Supply-ன் இணை நிறுவனர் மற்றும் தலைவரான டியானே ஹென்டிரிக்ஸ் 4.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மொத்த சொத்து மதிப்புடன் முதலாவது இடத்தினை திரும்ப அடைந்துள்ளார்.
மரியன் இலிட்ச் 4.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மொத்த சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
900 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மொத்த சொத்து மதிப்பினைக் கொண்டு 20 வயதான கயிலி ஜென்னர் சுயமுயற்சியால் உயர்ந்த அமெரிக்காவின் பணக்கார பெண்களில் மிக இளவயது உடையவராவார் .
இப்பட்டியலில் இடம்பெற்ற இரண்டு இந்திய வழிப் பெண்மணிகள்
அரிஸ்தா நெட்வொர்கஸ் கணினி வலையமைப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெய ஸ்ரீ உலால் (1.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் 18 வது இடத்தில் உள்ளார்)
IT ஆலோசனை நிறுவனம் சின்டெல்லின் இணைநிறுவனர் நீரஜ் சேத்தி (1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் 21 வது இடத்தில் உள்ளார்).
இப்பட்டியலில் உள்ள 60 பெண்களின் மொத்த உச்சநிலை சொத்து மதிப்பு 71 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.