TNPSC Thervupettagam

அமெரிக்காவின் தேசியப் பறவை

December 27 , 2024 27 days 91 0
  • 240 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் சக்தி மற்றும் வலிமையின் சின்னமாக விளங்கும் வெண்தலைக் கழுகு ஆனது, தற்போது அந்த நாட்டின் ஒரு அதிகாரப்பூர்வ தேசியப் பறவையாக மாறியுள்ளது.
  • வெண்தலைக் கழுகு ஆனது பல ஆண்டுகளாக அமெரிக்காவின் ஒரு தேசிய சின்னமாக உள்ளதோடு இது 1782 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க ஆவணங்களிலும் அமெரிக்காவின் அரசு முத்திரையிலும் பயன்படுத்தப்படுகிறது.
  • வெண்தலைக் கழுகு ஆனது வட அமெரிக்காவினைத் தாயகமாகக் கொண்டது.
  • அமெரிக்காவின் அரசு முத்திரை என்பது ஒப்பந்தங்கள் மற்றும் ஆணையங்கள் போன்ற அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பயன்படுத்தப்படும் ஒரு தேசிய சின்னம் ஆகும்.
  • 1782 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட இதன் இறுதி வடிவமைப்பு ஆனது ஒரு வெண் தலைக் கழுகு, ஆலிவ் மரத்தின் ஒரு கிளை, அம்புகள், ஒரு கொடி போன்ற கேடயம், E Pluribus Unum (இது "பலவற்றுள், ஒன்று" என பொருள்படுகிறது) என்ற சொற்றொடர் மற்றும் விண்மீன் திரள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • இந்த வெண்தலைக் கழுகு ஆனது 1940 ஆம் ஆண்டின் தேசியச் சின்னச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப் படுவதோடு இந்த உயிரினத்தின் விற்பனை அல்லது வேட்டையாடலை இது சட்ட விரோதமாக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்