TNPSC Thervupettagam

அமெரிக்காவின் புதிய அதிபர் - ஜோ பைடன்

January 25 , 2021 1330 days 542 0
  • ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அவர்கள் 2021 ஜனவரி 20 அன்று அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றார்.
  • அமெரிக்கப் பாராளுமன்றக் கட்டிடத்தின் மேற்கு  முகப்பில் நிகழ்த்தப்பட்ட 59வது அதிபர் பதவியேற்பு விழாவில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் ஆகியோர் பதவியேற்றனர்.
  • 78 வயதில் பதவியேற்கும் இவர் மிகவும் வயதான அமெரிக்க அதிபராவார்.
  • 2020 ஆம் ஆண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலானது பைடன் அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிடும் மூன்றாவது முறையாகும்.
  • அவரது முதல் முயற்சி 1988 ஆம் ஆண்டிலும் மற்றும் இரண்டாவது முயற்சி 2008 ஆம் ஆண்டிலும் மேற்கொள்ளப்பட்டது.
  • இவர் 2008 முதல் 2016 வரை இரண்டு பதவிக் காலத்திற்கு முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவின் துணை அதிபராக பணியாற்றினார்.
  • அடுத்துப் பதவியேற்ற கமலா ஹாரிஸ் அவர்கள் அமெரிக்காவின் முதல் பெண், ஆப்பிரிக்க மற்றும் ஆசிய-அமெரிக்க இனத்தைச் சேர்ந்த துணை அதிபராவார்.
  • 2016 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் செனட்டில் பணி புரிந்த முதல் தெற்காசிய அமெரிக்க மற்றும் இரண்டாவது ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி என்ற பெருமையை இவர் பெற்றார்.
  • டிரம்பின் 45வது அமெரிக்க அதிபர் பதவியானது ஜனவரி 20 மதியம் முடிவுக்கு வந்தது.
  • இந்தப் பதவியேற்பு விழாவில் முன்னாள் அதிபர்களான பாரக் ஒபாமா, பில் கிளிண்டன் மற்றும் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஆகியோர் ஒன்றுபட்ட பங்களிப்பை வழங்கினர்.
  • டொனால்ட் டிரம்ப் இந்த விழாவை முழுவதுமாக தவிர்த்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்