TNPSC Thervupettagam

அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்ட மர்மப் பொருட்கள்

February 24 , 2023 642 days 272 0
  • வட அமெரிக்காவின் வானத்தில் பறந்த மூன்று மர்மப் பொருட்களை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
  • இது 20,000 அடி (6,100 மீ) உயரத்தில் பயணித்ததால், அவை வணிக ரீதியாக இயக்கப் படும் விமானப் போக்குவரத்தில் குறுக்கிடக் கூடும்.
  • கடைசியாக சுடப்பட்ட பொருள் உருளை வடிவமும் 200 அடி உயரமும் கொண்டதாகும்.
  • இந்த வான்வழிப் பொருளின் தாங்கு பொருள் எடையானது 1000 பவுண்டுகளுக்கு மேல் இருந்தது.
  • முன்னதாக, அமெரிக்க விமானப்படையானது அதன் F-22 போர் விமானங்களைப் பயன்படுத்தி, தெற்கு கரோலினா கடற்கரைக்கு அருகில் சீனக் கண்காணிப்புப் பலூன் ஒன்றினைச் சுட்டு வீழ்த்தியது.
  • அடுத்த நாள் அது அலாஸ்கா பகுதியின் வான்வெளிக்கு அருகில் மற்றொரு வான் பொருளைச் சுட்டு வீழ்த்தியது.
  • மேலும், ஓர் அடையாளம் தெரியாத பொருள் வடக்கு கனடா பகுதி மீது சுட்டு வீழ்த்தப் பட்டது.
  • இந்த நான்காவது நிகழ்வானது ஹூரான் ஏரியின் மேல் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்