TNPSC Thervupettagam

அமெரிக்காவில் துருவ சுழல் காற்று மற்றும் குளிர்கால புயல்கள் 2025

January 10 , 2025 3 hrs 0 min 21 0
  • துருவச் சுழல் விரிவடைவதால் மிக கடுமையான குளிர்காலப் புயல்களை அமெரிக்கா எதிர்கொண்டு வருகிறது.
  • துருவச் சுழல் ஆனது, முதன்மையாக வடக்கு அரைக் கோளத்தின் மைய அட்சரேகை முதல் உயர் அட்சரேகைகளில் அமைந்துள்ள நாடுகளை பாதிக்கிறது.
  • துருவச் சுழல் ஆனது, சுமார் 155mph (250km/h) என்ற அளவு காற்றின் வேகத்துடன் வட துருவத்தைச் சுற்றி இடஞ்சுழி திசையில் சுழல்கிறது.
  • அடிவளிமண்டலம் சார்ந்தது மற்றும் படையடுக்கு மண்டலம் சார்ந்தது என இரண்டு வகையான துருவ சுழல்கள் உள்ளன.
  • அடிவளிமண்டலம் சார்ந்த துருவச் சுழல் ஆனது, பெரும்பாலான வானிலை நிகழ்வுகள் நிகழும் வளிமண்டலத்தின் தாழ் அடுக்கில் ஏற்படுகின்றன.
  • இது மேற்பரப்பில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் முதல் 15 கிலோ மீட்டர் வரை நீண்டு உள்ளது.
  • இந்தச் சுழல் ஆனது வடக்கு அட்சரேகைகள் முழுவதுமுள்ள பகுதிகளில் மிதமான ஒரு வானிலை சூழலை உருவாக்குகிறது.
  • படையடுக்கு மண்டலத் துருவச் சுழல் ஆனது 15 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் உயரத்தில் ஏற்படுகிறது.
  • அடிவளிமண்டல துருவச் சுழல் போலல்லாமல், படையடுக்கு மண்டல துருவச் சுழல்கள் கோடை காலத்தில் மறைந்து இலையுதிர் காலத்தில் மிகவும் வலிமையான அளவில் தோன்றுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்