TNPSC Thervupettagam

அமெரிக்காவில் தேசிய நெருக்கடி நிலை

February 17 , 2019 2110 days 591 0
  • அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதியன்று அமெரிக்க மற்றும் மெக்சிகோ எல்லை முழுவதும் ஒரு சுவரைக் கட்டுவதற்கான தனது உறுதிமொழியை நிறைவேற்றிட வேண்டி தேசிய நெருக்கடி நிலையை அறிவித்திருக்கின்றார்.
  • தற்சமயம் அவர் மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவதற்காக காங்கிரஸ் அச்சுவருக்கு தர மறுத்த கோடிக்கணக்கான டாலர்களை அணுகிட முடியும்.
  • தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பது என்பது, சில சட்டங்களை தற்காலிகமாக ரத்து செய்தல், ஒரு மனதாக தனிநபராக இராணுவத் திட்டங்களுக்கு அங்கீகாரம் அளித்தல் மற்றும் இராணுவ நிதிகளை மாற்றியமைத்தல் போன்ற செயல்களுக்கு சிறப்பு அதிகாரங்களை அமெரிக்க அதிபருக்கு அளிக்கின்றது.
  • முன்பு, பாராளுமன்றவாதிகள் எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுவதற்காக வாக்களித்த மசோதாவில் உள்ள 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற தொகையானது டிரம்ப் வலியுறுத்திய 5.7 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற தொகையைவிட மிகக் குறைந்த அளவாகும்.
  • செலவழிப்பதற்கு காங்கிரஸ் அங்கீகாரம் அளிக்காத தொகையை மீறும் வகையில் காங்கிரசைச் சுற்றி வளைக்கும் வகையிலான ஒரு தீர்மானமும் இதற்கு முன் வழங்காத வகையில் டிரம்பின் தீர்மானம் முன்னெப்போதும் இல்லாததாகும்.
  • ஒட்டுமொத்த இத்தீர்மானம் டிரம்பின் மூன்றாவதாகவும் உள்நாட்டுப் பிரிவில் முதலாவதாகவும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்