"மீன்கள் கொத்தாக உயிரிழத்தல்" என்று அழைக்கப்படும் ஒரு நிகழ்வினால் இறந்த ஆயிரக்கணக்கான மீன்கள் அமெரிக்காவில் தென்கிழக்கு டெக்சாஸ் கடற்கரைகளில் கரை ஒதுங்கின.
இது ஒரு குறுகிய காலத்தில் மற்றும் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்டப் பகுதியில் பல மீன்கள் அல்லது பிற நீர்வாழ் விலங்குகள் திடீரென மற்றும் எதிர்பாராத விதமாக உயிர் இழக்கும் நிகழ்வாகும்.
இந்நிகழ்வில் பெரும்பாலும், நீரில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு குறைவதன் காரணமாக மீன்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதால் அவை உயிரிழக்கின்றன.