TNPSC Thervupettagam

அமெரிக்கா மற்றும் ஐஎஸ்ஏ

November 13 , 2021 982 days 528 0
  • சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணியில் (ஐஎஸ்ஏ) ஒரு உறுப்பு நாடாக ஐக்கிய அமெரிக்க நாடுகள் (அமெரிக்கா) இணைந்துள்ளது.
  • ஐஎஸ்ஏ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 101வது நாடு அமெரிக்காவாகும்.
  • ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடந்த COP26 காலநிலை உச்சி மாநாட்டில், கால நிலைக்கான அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவர் ஜான் கெர்ரி முறைப்படி இந்தக் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
  • ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் இந்தியாவை உள்ளடக்கிய "One Sun One World One Grid" திட்டத்தின் வழிகாட்டல் குழுவிலும் அமெரிக்கா சேர்ந்துள்ளது.
  • பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே ஆகியோரால் 2015 ஆம் ஆண்டு சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணி தொடங்கப் பட்டது.
  • இது பிரான்சின் பாரீஸில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்ற மாநாட்டின் (COP-21) 21வது அமர்வின் போது தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்