டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவை OECD அமைப்பின் உலகளாவிய வரி ஒப்பந்தத்திலிருந்து வெளியேற்றுவதற்கான ஒரு முக்கியச் செயலாக்க ஆணையினை வெளியிடடார்.
உலகளாவிய வரி ஒப்பந்தம் ஆனது, பன்னாட்டு நிறுவனங்கள் தாங்கள் செயல்படும் நாடுகளில் நியாயமான பங்கிலான வரிகளை செலுத்துவதை உறுதி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டதாகும்.
ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் மற்றும் பிற நாடுகள் 15 சதவீதத்திலான உலகளாவிய பெரு நிறுவன குறைந்தபட்ச வரியை ஏற்றுக் கொண்டுள்ளன.
அமெரிக்காவில் சுமார் 10% உலகளாவிய குறைந்தபட்ச வரி நிர்ணயம் உள்ளது என்ற நிலையில் டிரம்ப் ஆட்சியின் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றான 2017 ஆம் ஆண்டு வரி குறைப்புத் தொகுப்பின் ஒரு பகுதி இதுவாகும்.