அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையானது 1994 ஆம் ஆண்டின் நாஃப்டா (North American Free Trade Agreement - NAFTA) அல்லது வட அமெரிக்கத் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்திற்கு மாற்று ஒப்பந்தமான அமெரிக்கா-மெக்ஸிகோ-கனடா என்ற ஒப்பந்தத்தினை நிறைவேற்றியுள்ளது.
இந்தப் புதிய ஒப்பந்தத்தில் கண்டிப்பான தொழிலாளர் விதிகள் மற்றும் சுற்றுச்சூழல் கூறுகள் ஆகியவை இணைக்கப் பட்டுள்ளன.
இது அடிப்படையில் நாஃப்டா 2.0 ஒப்பந்தமாகும்.
கனடா, மெக்ஸிகோ மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கையெழுத்திட்ட ஒரு ஒப்பந்தமான வட அமெரிக்கத் தடையில்லா வர்த்தக உடன்படிக்கைக்கான ஆரம்பம் நாஃப்டா என்ற ஒப்பந்தம் ஆகும்.
1994 ஆம் ஆண்டு பில் கிளிண்டன் அதிபராக இருந்த போது நாஃப்டா ஒப்பந்தமானது இறுதி செய்யப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.