அண்மையில் அமெரிக்கா, கனடா, மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகள் USMCA (The United States, Canada and Mexico) என்றழைக்கப்படும் திருத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் மீது ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தியுள்ளன.
1994 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 25 வருடமான வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு (North American Free Trade Agreement - NAFTA) பதிலாக USMCA என்ற இந்த ஒப்பந்தம் மாற்றாக அமையும்.
இது அமெரிக்காவுக்கு கனடா மற்றும் மெக்ஸிகோவின் பால்வள சந்தைகளுக்கு அதிகமான அணுகலையும் கனடாவின் கார்களை அதிகமாக இறக்குமதி செய்யவும் அனுமதிக்கிறது.
18 ஆண்டுகளுக்கு நீடிக்கும் இது 6 வருடங்களுக்கு ஒருமுறை மறுமதிப்பீடு செய்யப்படும்.