TNPSC Thervupettagam

அமெரிக்க – இந்திய கடற்படைப் பயிற்சி

April 3 , 2018 2301 days 645 0
  • இந்தியக் கடற்படையின் தல்வார் வகையைச் சேர்ந்த போர்க்கப்பலான ஐ.என்.எஸ். தர்காஷ் அமெரிக்கக் கடற்படையின் தியோடர் ரூஸ்வெல்ட் தாக்குதல் வகைக் கப்பலோடு இணைந்து வரவேற்பு மற்றும் பயிற்சி என்ற பெயரிலான கடற்படைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
  • அமெரிக்கக் கப்பலான தியோடர் ரூஸ்வெல்ட் தற்போது அரேபிய வளைகுடாப் பகுதியில் இஸ்லாமிய அரசு (Islamic State) எனும் குழுவிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
  • இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க வானூர்திக் கப்பல் தியோடர் ரூஸ்வெல்ட், அமெரிக்க ஏவுகணை அழிப்புக் கப்பலான பிரேபல் ஆகியவற்றுடன் ஐ. என்.எஸ் தர்காஷ் பயிற்சி மேற்கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்