TNPSC Thervupettagam

அமெரிக்க இரசாயன ஆயுதங்கள்

July 16 , 2023 499 days 256 0
  • அமெரிக்கா தனது இரசாயன ஆயுதக் கையிருப்பின் கடைசிப் பகுதியினை அழித்து உள்ளது.
  • இரசாயன ஆயுதங்களானது முதலாம் உலகப் போரில் நவீனப் போர் முறையில் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டன.
  • அவை குறைந்தது 100,000 பேரைக் கொன்றதாக மதிப்பிடப் பட்டது.
  • கிட்டத்தட்ட 800,000 சல்பர் மஸ்டர்ட் ஊக்கி கொண்ட இரசாயன வெடிமருந்துகள் 1950 ஆம் ஆண்டுகளில் இருந்து சேமித்து வைக்கப்பட்டன.
  • சர்வதேச இரசாயன ஆயுதங்கள் உடன்படிக்கையின் கீழ், எஞ்சியுள்ள இரசாயன ஆயுதங்களை அகற்றுவதற்கு செப்டம்பர் 30 ஆம் தேதியானது அமெரிக்காவிற்கான காலக்கெடுவாக விதிக்கப்பட்டது.
  • இந்த உடன்படிக்கையானது 1997 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த நிலையில் 193 நாடுகள் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
  • எகிப்து, வட கொரியா மற்றும் தென் சூடான் ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
  • நான்காவது நாடாக இஸ்ரேல், இந்த ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும், அதனை அங்கீகரிக்கவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்