அமெரிக்கா தனது இரசாயன ஆயுதக் கையிருப்பின் கடைசிப் பகுதியினை அழித்து உள்ளது.
இரசாயன ஆயுதங்களானது முதலாம் உலகப் போரில் நவீனப் போர் முறையில் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டன.
அவை குறைந்தது 100,000 பேரைக் கொன்றதாக மதிப்பிடப் பட்டது.
கிட்டத்தட்ட 800,000 சல்பர் மஸ்டர்ட் ஊக்கி கொண்ட இரசாயன வெடிமருந்துகள் 1950 ஆம் ஆண்டுகளில் இருந்து சேமித்து வைக்கப்பட்டன.
சர்வதேச இரசாயன ஆயுதங்கள் உடன்படிக்கையின் கீழ், எஞ்சியுள்ள இரசாயன ஆயுதங்களை அகற்றுவதற்கு செப்டம்பர் 30 ஆம் தேதியானது அமெரிக்காவிற்கான காலக்கெடுவாக விதிக்கப்பட்டது.
இந்த உடன்படிக்கையானது 1997 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த நிலையில் 193 நாடுகள் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
எகிப்து, வட கொரியா மற்றும் தென் சூடான் ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
நான்காவது நாடாக இஸ்ரேல், இந்த ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும், அதனை அங்கீகரிக்கவில்லை.