அமெரிக்க உளவு செயற்கைக்கோளானது கலிபோர்னியாவிலிருந்து அதன் விண்வெளி சுற்றுப்பாதைக்கு செலுத்தப்பட்டது.
வான்ட்ன்பெர்க் விமானப் படைத் தளத்திலிருந்து தேசிய உளவு பார்க்கும் அலுவலக செயற்கைக் கோளானது சக்தி வாய்ந்த டெல்டா 4 என்ற கனரக ராக்கெட் மூலமாக செலுத்தப்பட்டது.
NROL-7 என பெயரிடப்பட்ட இந்த திட்டமானது 2006-ல் நிறுவப்பட்ட இந்நிறுவனத்தின் 132-வது வெற்றிகரமான செலுத்துதல் ஆகும்.
இது கட்டுப்பாட்டு மையம் மற்றும் ஏவுதளத்திற்கிடையேயான தகவல் தொடர்பு பிரச்சினைகளால் விண்ணில் செலுத்துவது தள்ளி வைக்கப்பட்ட பின்னரான இரண்டாவது முயற்சியில் செலுத்தப்பட்டது ஆகும்.
தேசிய உளவு பார்க்கும் அலுவலகமானது அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களுக்குப் பொறுப்பானதாகும்.
ஒன்றிணைந்த செலுத்துதல் கூட்டணியானது (United Launch Alliance) லாக்ஹீட் மார்டின் மற்றும் போயிங் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.