முன்னாள் அமெரிக்க ஓபன் போட்டி சாம்பியனான ஸ்டான் வாவ்ரிங்கா, 40 வயதான ஜிம்மி கானர்ஸ் 1992 ஆம் ஆண்டில் பெற்ற வெற்றிக்கு அடுத்தபடியாக இப்போட்டியில் வெற்றி பெற்ற மிக வயதான மனிதர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
பெண் மற்றும் ஆண் போட்டியாளர்களுக்கு சமமானப் பரிசுத் தொகையை வழங்கிய முதல் அமெரிக்க ஓபன் விளையாட்டுப் போட்டியின் 50வது ஆண்டு விழாவானது சமீபத்தில் கொண்டாடப்பட்டது.
1973 ஆம் ஆண்டில் நடப்பு அமெரிக்க ஓபன் போட்டி சாம்பியனாக இருந்த 79 வயது டென்னிஸ் வீராங்கனையான பில்லி ஜீன் கிங், தனது சக பெண் வீராங்கனைகளை ஒன்று திரட்டி, ஆண்களுக்கு நிகரான பரிசுத் தொகை பெண்களுக்கும் கிடைக்கா விட்டால், அந்த ஆண்டு போட்டியைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அமெரிக்க ஓபன் போட்டியின் ஆடவ மற்றும் மகளிர் சாம்பியன்களுக்கு 25,000 டாலர்கள் என்ற சமமான பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மற்ற அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளும் இந்த அறிவிப்பினைப் பின்பற்றச் செய்வதற்கு 34 ஆண்டுகள் ஆனது.
இந்த ஆண்டு, அமெரிக்க ஓபன் போட்டியின் வெற்றியாளர்களுக்கு தலா 3 மில்லியன் டாலர் என்ற சமமான பரிசுத் தொகை வழங்கப் படும்.