TNPSC Thervupettagam

அமெரிக்க கச்சா எண்ணெய்

April 26 , 2020 1582 days 624 0
  • டெக்சாஸ் லைட் ஸ்வீட்  (Texas light sweet) என்று அழைக்கப்படும் மேற்கு டெக்சாஸ் இடைநிலைச் சந்தையானது  (WTI - West Texas intermediate), அமெரிக்காவில் எண்ணெய் விலையில் ஓர் அளவுகோலாகப் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெயின் ஒரு தர வகையாகும்.
  • இது உலகளவில் கச்சா எண்ணெயின் ஒரு மிகச் சிறந்த தர வகையாகும்.
  • இது தன் குறைந்த அடர்த்தி காரணமாக  லைட் அல்லது அடர்குறைவான கச்சா எண்ணெய் என அழைக்கப் படுகிறது. 
  • மேலும் அதன்  குறைந்த கந்தக உள்ளடக்கத்தின்  காரணமாக அது இனிப்பான வகை என்றும் அழைக்கப் படுகிறது.
  • நியூயார்க்கில் இயங்கும் மேற்கு டெக்சாஸ் இடைநிலைச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது ஏப்ரல் 20 அன்று ஒரு பீப்பாய் மைனஸ் 40.32 டாலராக சரிந்து அமெரிக்க எண்ணெய்ச் சந்தைகளில் ஒரு வரலாற்றை உருவாக்கியுள்ளது.
  • இதுவரை அறிந்ததில் இதுவே மிகக் குறைந்த கச்சா எண்ணெய் விலையாகும்.
  • இதற்கு முன் மிகக் குறைந்த விலையானது இரண்டாம் உலகப் போருக்குப் பின் உடனடியாக ஏற்பட்டதாகும்.
  • எண்ணெய்ச் சந்தைகளுக்கான மூன்று முக்கிய அளவீடுகளில் பிரென்ட் கச்சா (வடக்குக் கடல் பகுதியிலிருந்து) மற்றும் துபாய் கச்சா ஆகியவற்றுடன் சேர்த்து இதுவும் ஒன்றாகும்.
  • இந்தியக் கச்சா எண்ணெயின் கொள்முதலானது மேற்கு டெக்சாஸ் சந்தையை உள்ளடக்கி யிருக்கவில்லை .
  • இந்தியா பிரென்ட் சந்தை மற்றும் சில வளைகுடா நாடுகள் ஆகியவற்றிடமிருந்து மட்டுமே எண்ணெயை வாங்குகின்றது. அதனால் நேரடியான தாக்கம் எதுவும் இந்தியாவிற்குக் கிடையாது.  
  • ஒரு பீப்பாய் என்பது 157 லிட்டராகும்.
  • ஆனால் செயல்முறைக்குள்ளாக்கிய பிறகு இது 166 லிட்டருக்கு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்