அமெரிக்க நாட்டின் புலம்பெயர்ந்தோருக்கான முன்னணி மூலங்கள்
October 7 , 2024 47 days 71 0
உலகின் சர்வதேச புலம்பெயர்ந்தோரில் சுமார் ஐந்தில் ஒரு பங்கினர் அமெரிக்க நாட்டினைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டில் பிறந்த வந்த நபர்களின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் சாதனை அளவாக 47.8 மில்லியனை எட்டியது என்பதோடு இது முந்தைய ஆண்டை விட 1.6 மில்லியன் அதிகரித்துள்ளது.
மெக்ஸிகோ, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அமெரிக்காவில் வசிக்கும் புலம் பெயர்ந்தோரின் பிறப்பிடங்களில் முதன்மையானவையாகும்.
அமெரிக்காவில் 10.6 மில்லியன் மெக்சிகன்கள் வாழ்வதுடன் மெக்சிகோ மிகப்பெரிய புலம் பெயர்ந்தோர் பிறப்பிட நாடாக உள்ளது என்பதோடு 6% இந்தியர்களும், அதைத் தொடர்ந்து 5% சீனர்களும் அங்கு வாழ்கின்றனர்.