அமெரிக்க கருவூலத் துறையால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, அமெரிக்க நிதிப்பத்திரங்களை அதிகளவில் வைத்திருக்கும் உலகின் 12-வது மிகப்பெரிய அயல் நாடு (Overseas Holder) இந்தியாவாகும்.
டிசம்பர் மாதக் கணக்கீட்டின் படி இந்தியா சுமார்7 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய அமெரிக்க நிதிப்பத்திரங்களை கொண்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி,18 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை கொண்டு அதிக மதிப்பிலான அமெரிக்க நிதிப்பத்திரங்களை கொண்ட நாடாக சீனா உள்ளது. இதனைத் தொடர்ந்து 1.06 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய அமெரிக்க நிதிப்பத்திரங்களை கொண்டுள்ள நாடாக ஜப்பான் இரண்டாவது இடத்தில் உள்ளது.
பிரிக் (BRIC) நாடுகளுள் இந்தியா அமெரிக்க நிதிப்பத்திரங்களை அதிகளவு கொண்டுள்ள 3-வது நாடாக உள்ளது. இரஷ்யா BRIC நாடுகளுள் கடைசி இடத்தில் உள்ளது.