இந்த நாள் அமெரிக்க அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட பத்தொன்பதாவது திருத்தம் அங்கீகரிக்கப் பட்டதைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.
இது 1920 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்ட திருத்தம் XIX என்றும் அறியப்படுகிறது.
இந்தத் திருத்தமானது, மத்திய அரசாங்கமும், மாகாண அரசுகளும் அமெரிக்காவின் குடிமக்களுக்குப் பாலின அடிப்படையில் வாக்களிக்கும் உரிமையை மறுப்பதைத் தடை செய்கிறது.