அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கியின் அடுத்த தலைவர் -ஜெரோம் பாவெல்
November 4 , 2017 2608 days 908 0
எல்லோரும் எதிர்பார்த்த விதத்திலும், உயர்ந்து வரும் பங்குச் சந்தையைப் பாதிக்காத வண்ணத்திலும், தற்போதைய அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவராக உள்ள ஜானட் யெல்லனின் பதவிக் காலம் முடிவடைந்த பின் அடுத்த தலைவர் பதவிக்கு ஜெரோம் பாவெல்லை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
2013-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவால் நியமிக்கப்பட்ட ஜானட் யெல்லனை அடுத்து 64 வயதாகும் பாவெல் அப்பதவியில் அமர உள்ளார்.
அமெரிக்க மத்திய வங்கியின் முதல் பெண் தலைவர் என்ற வகையில் பதவி வகிக்கும் ஜானட் யெல்லனின் தற்போதைய பதவிக்காலம் அடுத்த பிப்ரவரியில் முடிவடைய இருக்கிறது.