TNPSC Thervupettagam

அமெரிக்க மேலவை குழுவின் அருணாச்சலப் பிரதேசம் தொடர்பான தீர்மானம்

July 17 , 2023 370 days 172 0
  • அருணாச்சலப் பிரதேச மாநிலத்தினை இந்தியாவின் ஒருங்கிணைந்தப் பகுதியாக அங்கீகரிக்கும் வகையிலான ஒரு தீர்மானத்தினை அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவைக் குழு நிறைவேற்றியுள்ளது.
  • சீனாவிற்கும் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்திற்கும் இடையில் உள்ள மெக்மஹோன் வரம்பு எல்லைகள் சர்வதேச எல்லையாகத் திகழ்வதனை அமெரிக்கா அங்கீகரிப்பதாக இந்தத் தீர்மானம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
  • அருணாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பெரும் பகுதிகள் சீன நாட்டினைச் சேர்ந்தப் பிரதேசங்கள் என்ற சீனாவின் உரிமைக் கோரல்களை இது புறந்தள்ளியது.
  • இந்தத் தீர்மானமானது, தற்போது முழு வாக்கெடுப்பிற்காக மேலவைக்கு அனுப்பப்பட உள்ளது.
  • அருணாச்சலப் பிரதேசத்தினை ஜங்னான் என்று சீனா குறிப்பிடுகிறது.
  • அருணாச்சலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என பெய்ஜிங் உரிமை கோருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்