அமெரிக்க வெண்தலை (வழுக்கை) கழுகு இனமானது 2007 ஆம் ஆண்டில் அருகி வரும் உயிரினங்களின் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டது என்பது அதன் வளங்காப்பில் மேற் கொள்ளப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்கச் சாதனையினைக் குறிக்கிறது.
அப்போதிலிருந்து இந்தப் பறவைகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ளது.
அமெரிக்க மீன் மற்றும் வனவிலங்குச் சேவை அமைப்பின் 2021 ஆம் ஆண்டு அறிக்கை என்பது, 2009 ஆம் ஆண்டிலிருந்து காடுகளில் உள்ள வெண்தலைக் கழுகுகளின் எண்ணிக்கையானது நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.
வெண்தலைக் கழுகின் இயற்கை வாழ்விடங்கள் ஆனது, கனடாவின் பெரும்பாலான பகுதிகள், அமெரிக்கா மற்றும் வடக்கு மெக்சிகோ ஆகியப் பகுதிகளை உள்ளடக்கிய வட அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கியது.
வட அமெரிக்காவைச் சேர்ந்த ஒரே கடல்சார் கழுகு இனம் இதுவாகும்.
வெண்தலைக் கழுகுகளின் சராசரி ஆயுட்காலம் 20 முதல் 30 ஆண்டுகள் ஆகும்.
பெண் வெண்தலைக் கழுகுகள் ஆண்களை விட அளவில் சற்று பெரியவை ஆகும்.