புதைபடிவ எரிபொருட்களை நீக்கும் இலக்குடன் காற்று, சூரிய ஒளி மற்றும் பிற புதுப்பிக்கத் தக்க ஆற்றலின் பயன்பாட்டினை அதிகரிப்பதன் மூலம் புவி வெப்பம் அடைதலை கூட்டாக இணைந்து சமாளிப்பதற்காக அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
ஆனால், மிகவும் மாசுமிக்க புதைபடிம எரிபொருளான நிலக்கரியைப் பயன்படுத்துவதை நிறுத்தச் செய்வதாகவோ அல்லது புதிய நிலக்கரி ஆலைகளை அனுமதிப்பதை நிறுத்துவதாகவோ சீனா உறுதியளிக்கவில்லை.
ஆனால், இரு நாடுகளும் “2030 ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனின் பயன்பாட்டினை உலகளவில் மூன்று மடங்காக உயர்த்துவதற்கான முயற்சிகளைத் தொடர்வதற்கு” ஒப்புக்கொண்டுள்ளன.
சீனா தனது நாட்டின் எந்தவொரு பகுதியிலும் குறிப்பிட்ட சில உமிழ்வு இலக்குகளை நிர்ணயிக்க ஒப்புக் கொள்வது இதுவே முதல் முறையாகும்.