TNPSC Thervupettagam

அமெரிக்க – சீனப் பருவநிலை ஒப்பந்தம்

November 21 , 2023 370 days 278 0
  • புதைபடிவ எரிபொருட்களை நீக்கும் இலக்குடன் காற்று, சூரிய ஒளி மற்றும் பிற புதுப்பிக்கத் தக்க ஆற்றலின் பயன்பாட்டினை அதிகரிப்பதன் மூலம் புவி வெப்பம் அடைதலை கூட்டாக இணைந்து சமாளிப்பதற்காக அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
  • ஆனால், மிகவும் மாசுமிக்க புதைபடிம எரிபொருளான நிலக்கரியைப் பயன்படுத்துவதை நிறுத்தச் செய்வதாகவோ அல்லது புதிய நிலக்கரி ஆலைகளை அனுமதிப்பதை நிறுத்துவதாகவோ சீனா உறுதியளிக்கவில்லை.
  • ஆனால், இரு நாடுகளும் “2030 ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனின் பயன்பாட்டினை உலகளவில் மூன்று மடங்காக உயர்த்துவதற்கான முயற்சிகளைத் தொடர்வதற்கு” ஒப்புக்கொண்டுள்ளன.
  • சீனா தனது நாட்டின் எந்தவொரு பகுதியிலும் குறிப்பிட்ட சில உமிழ்வு இலக்குகளை நிர்ணயிக்க ஒப்புக் கொள்வது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்