TNPSC Thervupettagam

அமேசான் காட்டுத் தீ

August 25 , 2019 1792 days 550 0
  • அமேசான் மழைக் காடுகளில் மிகப்பெரிய அளவிலான காட்டுத் தீயானது எரிந்துக் கொண்டிருக்கின்றது. இது உலகம் முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் அரசாங்கங்களையும் எச்சரித்துள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஜுன் மாதம் வரை அமேசான் ஏறத்தாழ 3,44,500 ஹெக்டேர் காடுகள் பரப்பை இழந்துள்ளது.
  • பிரேசிலின் தற்போதைய வலது சாரி அதிபரான ஜெயிர் போல்சோநேரோ என்பவர் விவசாயம் மற்றும் சுரங்க நடவடிக்கைகளுக்குப் பரந்த அளவிலான மரங்களை அகற்றும் நடவடிக்கைகளை ஊக்குவித்ததற்காகக் குற்றம் சாட்டப்படுகின்றார்.
  • வறட்சிக் காலமான ஜூலை மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களுக்கிடையே அமேசானில் காட்டுத் தீ ஏற்படுவது வழக்கமானதாக இருந்தாலும், அவற்றில் பெரும்பாலாவை இயற்கைக் காரணங்களால் ஏற்படுகின்றன.
  • பின்வருவனவற்றின் காரணமாக அமேசான் மழைக் காடுகள் முக்கியமானவையாகும்.
    • இது பூமியின் வளிமண்டலத்தில் 20 சதவிகித ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றது.
    • இது பிராந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் நீர் சுழற்சியில் தாக்கம் ஏற்படுத்துகின்றது.
    • இது அதிக அளவிலான பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் பூர்வீக இனங்கள் ஆகியவற்றிற்கான இடமாக விளங்குகின்றது. இவைகள் தற்பொழுது அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்