மத்திய அரசானது எட்டு அமைச்சரவைக் குழுக்களை மறுசீரமைத்துள்ளது.
பொருளாதார விவகாரங்களுக்கான அனைத்து முக்கிய அமைச்சரவைக் குழு (CCEA) மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCPA) ஆகியவற்றில் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்களுக்கு இது இடம் அளிக்கிறது.
இலாகாக்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் அல்லது புதிய அமைச்சர்களை நீக்குதல் அல்லது சேர்த்தல் போன்றவற்றை உள்ளடக்குவதற்காக அமைச்சரவை குழுக்கள் அவ்வப்போது மறுசீரமைக்கப் படுகின்றன.
முன்னதாக 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 08 ஆம் தேதியன்று மறுசீரமைக்கப் பட்டது.