TNPSC Thervupettagam

அமைச்சரவை ஒப்புதல்கள்

July 7 , 2018 2337 days 695 0
அகர்தலா விமானநிலையத்தின் பெயர் மாற்றம்
  • திரிபுராவில் உள்ள அகர்தலா விமான நிலையத்தை மகாராஜா பிர் பிக்ரம் மனிக்யா கிஷோர் விமான நிலையம், அகர்தலா என்று பெயர் மாற்றம் செய்வதற்கான முன்மொழிதலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இவர் திரிபுராவின் இந்தியாவுடனான இணைப்பிற்கு முன்பு 1923-1947 காலகட்டத்தில் திரிபுராவின் அரசராக இருந்தவராவார்.
  • இவர் திரிபுராவின் நவீனக் கட்டிடக்கலையின் தந்தை என்று கருதப்படுகிறார். இன்றைய திரிபுராவின் முழு திட்டமிடுதலும் இவரது ஆட்சிக் காலத்தின் போது தொடங்கப்பட்டது.
  அரசுக் கிராமப்புற வங்கிகளின் மறுமூலதனம்
  • அரசுக் கிராமப்புற வங்கிகளின் மறுமூலதனத்திற்கான திட்டத்தினை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு (2019-20 வரை) விரிவுபடுத்துவதற்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த திட்டம், மூலதனத்திற்கும் இடர்வாய்ப்பு மதிப்பேற்றப்பட்ட சொத்துகளுக்கும் (CRAR - Capital Risk Weighted Asset Ratio) இடையே உள்ள விகிதம் 9% என்ற பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச விகிதத்தினை தொடர்ந்து கடைபிடிக்க RRB-க்கு (Regional Rural Banks) உதவும்.
  • இது வலிமையான மூலதன அமைப்பு மற்றும் குறைந்தபட்ச CRAR-ன் தேவையான அளவு ஆகியவற்றை உறுதிபடுத்துகிறது.
  • இத்திட்டம் RRB-ன் நிதிநிலைத் தன்மையை எளிதாக்குவதற்கும் நிதிநிலையை உள்ளடக்குதலில் RRB-ன் முக்கியப் பங்கு மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள கடன் தேவையை எதிர்கொள்வதற்கும் உதவும்.
  • அரசுக் கிராமப்புற வங்கிகளின் மறுமூலதனத் திட்டம் 2010-11ல் தொடங்கப்பட்டது மற்றும் 2012-13 &  2015-16 ஆகிய வருடங்களில் இரண்டு முறை விரிவாக்கப்பட்டது.
  உலக அறிவுசார் சொத்துக்களுக்கான அமைப்பின் (WIPO - World Intellectual Property Organisation) பதிப்புரிமை ஒப்பந்தந்திற்கான உரிமை பெறுதல் மற்றும் WIPO-ன் செயல்திறன் மற்றும் ஒலியமை வடிவத்திற்கான ஒப்பந்தத்திற்கான உரிமை பெறுதல்
  • WIPO-ன் பதிப்புரிமை ஒப்பந்தம், 1996 மற்றும் WIPO-ன் செயல்திறன் மற்றும் ஒலியமை வடிவத்திற்கான ஒப்பந்தம் 1996 ஆகியவற்றுக்கான இந்தியாவின் உரிமை பெறுதலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த ஒப்பந்தங்கள், இணையதள மற்றும் இலக்கமுறை பதிப்புரிமைக்கான பாதுகாப்பிற்காகவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்திற்கான முன்மொழிதல் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையினால் சமர்ப்பிக்கப்பட்டது.
  • இந்த இரண்டு ஒப்பந்தங்களும் படைப்பாளிகள் மற்றும் உரிமையாளர்களை அவர்களின் வேலைப்பாடுகளைப் பாதுகாக்கவும் அவற்றின் உபயோகத்தைப் பற்றிய தகவல்களைப் பாதுகாக்கவும் ,
    • உரிமையாளர்கள் மேம்பாட்டு தகவல்கள் மற்றும்
    • தொழில்நுட்ப பாதுகாப்பு நடவடிக்கைகளின் பாதுகாப்பு
ஆகியவற்றை கொண்ட  ஒரு கட்டமைப்பை வழங்குகிறது.   NCSK-கான துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை உருவாக்குதல் (NCSK - National Commission for Safai Karmacharis)
  • சஃபாய் கர்மசாரிக்களுக்கான தேசிய குழுவிற்கான துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை உருவாக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இலக்குக் குழுக்களின் விருப்ப நோக்கங்களான நலம் மற்றும் மேம்பாடு ஆகியவற்றைப் பூர்த்தி செய்தல் மற்றும் NCSK-ன் செயல்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைப்பதே இந்த முடிவின் குறிக்கோள் ஆகும்.
  • தற்பொழுது இக்குழு 4 உறுப்பினர்கள் மற்றும் ஒரு தலைவரைக் கொண்ட குழு ஆகும்.
  • இந்த பதவிகளின் உருவாக்கத்துடன், NCSK தற்பொழுது ஒரு தலைவர், ஒரு துணைத்தலைவர் மற்றும் ஐந்து உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்