TNPSC Thervupettagam

அமைச்சரவை பதவியேற்பு விழா 2024

June 10 , 2024 38 days 129 0
  • தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) இணைந்து 293 இடங்களை வென்றது என்ற நிலையில் இது ஆட்சி அமைப்பதற்குப் போதுமான பெரும்பான்மையாகும்.
  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக இராஷ்டிரபதி பவனில் பதவியேற்றார்.
  • இந்தியாவின் அண்டை நாடு மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த நாடுகளின் உயர்மட்டத் தலைவர்கள் – மாலத்தீவின் அதிபர், வங்காளதேச பிரதமர், நேபாள தலைவர், இலங்கை அதிபர், மொரீஷியஸ் பிரதமர், பூடான் பிரதமர் மற்றும் செய்ஷெல்ஸ் நாட்டின் துணை அதிபர் ஆகியோர் இந்த விழாவில் முக்கியச் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
  • அமைச்சரவையின் உறுப்பினர் எண்ணிக்கையானது பிரதமர், 30 அமைச்சரவைக் குழு  உறுப்பினர்கள், 5 இணை அமைச்சர்கள் (சுயாதீனப் பொறுப்பு) மற்றும் 36 இணை அமைச்சர்கள் என  71 ஆக அதிகரித்தது.
  • இந்தப் புதிய அமைச்சரவையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 5 பேருடன் தென் இந்தியாவிலிருந்து 13 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.
  • வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு மத்திய அமைச்சர்களுக்கு புதிய அமைச்சரவையில் மீண்டும் பதவியளிக்கப்பட்டது.
  • புதிய 18வது மக்களவை அமைச்சரவையில் ஏழு பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
  • ஜூன் 05 ஆம் தேதி கலைக்கப்பட்ட முந்தைய சபையில் பத்து பெண் அமைச்சர்கள் இருந்தனர்.
  • TDP பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானி, 5700 கோடி ரூபாய் சொத்துக்களுடன், அமைச்சர்கள் குழுவில் இணைந்த செல்வ வளம் மிக்க அமைச்சர் ஆவார்.
  • 18வது மக்களவையின் 543 உறுப்பினர்களில் கடந்த தேர்தலில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட 216 பேர் உட்பட 262 பேர் முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர்களாகப் பணியாற்றியவர்கள் ஆவர்.
  • புதிய மக்களவையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சராசரி வயது 56 வயது ஆகும் என்ற நிலையில் இது 17வது மக்களவையில் 59 வயதாக இருந்தது.
  • முந்தைய மக்களவையில் 78 பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர் என்ற நிலையில் தற்போது மொத்த உறுப்பினர்களில் சுமார் 14% என்ற அளவில் 74 பெண் உறுப்பினர்களே உள்ளனர்.
  • 48% புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பிரமாணப் பத்திரங்களில் தங்களது தொழிலினைச் சமூகப் பணி என்றும், அதைத் தொடர்ந்து 37% பாராளுமன்ற உறுப்பினர்கள் விவசாயம் என்றும் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்