தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) இணைந்து 293 இடங்களை வென்றது என்ற நிலையில் இது ஆட்சி அமைப்பதற்குப் போதுமான பெரும்பான்மையாகும்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக இராஷ்டிரபதி பவனில் பதவியேற்றார்.
இந்தியாவின் அண்டை நாடு மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த நாடுகளின் உயர்மட்டத் தலைவர்கள் – மாலத்தீவின் அதிபர், வங்காளதேச பிரதமர், நேபாள தலைவர், இலங்கை அதிபர், மொரீஷியஸ் பிரதமர், பூடான் பிரதமர் மற்றும் செய்ஷெல்ஸ் நாட்டின் துணை அதிபர் ஆகியோர் இந்த விழாவில் முக்கியச் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அமைச்சரவையின் உறுப்பினர் எண்ணிக்கையானது பிரதமர், 30 அமைச்சரவைக் குழு உறுப்பினர்கள், 5 இணை அமைச்சர்கள் (சுயாதீனப் பொறுப்பு) மற்றும் 36 இணை அமைச்சர்கள் என 71 ஆக அதிகரித்தது.
இந்தப் புதிய அமைச்சரவையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 5 பேருடன் தென் இந்தியாவிலிருந்து 13 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.
வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு மத்திய அமைச்சர்களுக்கு புதிய அமைச்சரவையில் மீண்டும் பதவியளிக்கப்பட்டது.
புதிய 18வது மக்களவை அமைச்சரவையில் ஏழு பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஜூன் 05 ஆம் தேதி கலைக்கப்பட்ட முந்தைய சபையில் பத்து பெண் அமைச்சர்கள் இருந்தனர்.
TDP பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானி, 5700 கோடி ரூபாய் சொத்துக்களுடன், அமைச்சர்கள் குழுவில் இணைந்த செல்வ வளம் மிக்க அமைச்சர் ஆவார்.
18வது மக்களவையின் 543 உறுப்பினர்களில் கடந்த தேர்தலில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட 216 பேர் உட்பட 262 பேர் முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர்களாகப் பணியாற்றியவர்கள் ஆவர்.
புதிய மக்களவையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சராசரி வயது 56 வயது ஆகும் என்ற நிலையில் இது 17வது மக்களவையில் 59 வயதாக இருந்தது.
முந்தைய மக்களவையில் 78 பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர் என்ற நிலையில் தற்போது மொத்த உறுப்பினர்களில் சுமார் 14% என்ற அளவில் 74 பெண் உறுப்பினர்களே உள்ளனர்.
48% புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பிரமாணப் பத்திரங்களில் தங்களது தொழிலினைச் சமூகப் பணி என்றும், அதைத் தொடர்ந்து 37% பாராளுமன்ற உறுப்பினர்கள் விவசாயம் என்றும் அறிவித்துள்ளனர்.