October 5 , 2024
49 days
129
- தமிழக அரசின் அமைச்சர்களின் பதவி நிலையில் தமிழக மாநிலத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
- அவர் விளையாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக, பதவி நிலையில் 10வது இடத்தில் இருந்தார்.
- இவரது பதவி நிலையானது முதல்வர், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு அடுத்த நிலையில் உள்ளது.
- செப்டம்பர் 28 ஆம் தேதியன்று, ஆளுநர் அவர்கள் அரசியலமைப்பின் 164 வது சரத்தின் கீழ் அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக நியமித்தார்.
- அவர் தமிழக அரசின் வரலாற்றில் மூன்றாவதாக துணை முதல்வர் பதவியைப் பெற்று உள்ளார்.
- 2009 ஆம் ஆண்டு முதல், தமிழகத்தில் 2 துணை முதல்வர்கள் இருந்தனர், எனினும் அவர்களில் எவரும் தனது முழு பதவிக் காலத்தினை நிறைவு செய்யவில்லை.
- முதலாவது துணை முதல்வரானவர் தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூன்றாவது மகன் மு.க.ஸ்டாலின் (2009-2011) ஆவார்.
- 2017-2021 ஆம் ஆண்டு எடப்பாடி K.பழனிசாமியின் ஆட்சியில் ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது துணை முதல்வராகப் பதவியேற்றார்.
- துணைப் பிரதமர் அல்லது துணை முதல்வர் பதவிக்கு என இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த விதிகளும் இல்லை.
Post Views:
129