தமிழக அரசானது, அமைச்சர்கள் அவர்களுக்குச் சொந்தமான அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட தனியார் வீடுகளில் தங்கியிருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு வழங்கப் படுகின்ற வாடகைத் தொகையினை சமீபத்தில் உயர்த்தியுள்ளது.
இந்த இரு வகைகளின் கீழ், அவர்களுக்கு வழங்கப்படும் வாடகைத் தொகையானது, மாதத்திற்கு 70,000 ரூபாயிலிருந்து 1.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தலைமைக் கொறடா ஆகியோருக்கும் இது பொருந்தும்.
எட்டு ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு வாடகைத் தொகையில் திருத்தம் செய்யப் பட்டுள்ளது.
முந்தைய திருத்தமானது 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், அப்போதைய மாநில அரசு அமைச்சர்களுக்கு வழங்கும் வாடகையை மாதத்திற்கு 20,000 ரூபாயிலிருந்து 70,000 ரூபாயாக உயர்த்தியது.
மாநில அரசு வழங்கும் வீட்டில் அவர்கள் தங்கியிருந்தால் அவர்களுக்கு வீட்டு வாடகை கொடுப்பனவு வழங்கப் படாது.