TNPSC Thervupettagam

அமைச்சர்கள் குழு – சுரேஷ் பிரபு தலைமை

August 9 , 2018 2301 days 767 0
  • மத்திய அரசு 16 உறுப்பினர்கள் கொண்ட பிராந்திய பொருளாதாரக் கூட்டமைப்பு (Regional Cooperation Economic Partnership - RCEP) பேச்சுவார்த்தைகளைப் பற்றி முடிவு செய்ய மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையிலான 4 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சர்கள் குழு ஒன்றை நியமித்துள்ளது.
  • இக்குழு இந்தியாவானது அக்கூட்டமைப்பிற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடலாமா அல்லது வேண்டாமா என பிரதமருக்கு அறிவுறுத்துவதற்கென உருவாக்கப்பட்டுள்ளது.
  • இக்குழு
    • நிதி (தற்காலிகமான) மற்றும் மின்சாரத் துறை அமைச்சர்– பியூஸ் கோயல்,
    • பாதுகாப்புத் துறை அமைச்சர் – நிர்மலா சீத்தாராமன்
    • வீட்டுவசதி நகர்ப்புறத் துறை அமைச்சர் – ஹர்தீப் பூரி

ஆகியோரைக் கொண்டதாகும்.

  • தற்போதைக்கு அக்கூட்டமைப்பில் சேர்வதா அல்லது வேண்டாமா என்பதற்கான தடைகளுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இக்குழு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • மேலும் இக்குழு, 2019-ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் நடைபெற உள்ள RCEP (Regional Cooperation Economic Partnership) அமைச்சரவை கூட்டத்தில் இந்தியாவிற்கான யுக்தியை மெருகேற்றிட உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்