1998 ஆம் ஆண்டு கற்கள் வீசி பேருந்துகளை சேதப்படுத்திய வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தண்டனையைத் தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரான ரெட்டி தனது பதவி விலகலை அமைச்சரவையில் சமர்ப்பித்ததை அடுத்து அவரது பதவி விலகல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மாநில சட்டசபையில் ஓசூர் சட்டமன்றத் தொகுதியின் பிரதிநிதியான ரெட்டி சிறப்பு நீதிமன்றத்தால் தண்டணையளிக்கப்பட்ட முதல் அமைச்சராவார்.
இவர் பதவி வகித்து வந்த அமைச்சகமானது பள்ளிக் கல்வித் துறை அமைச்சரான K.A. செங்கோட்டையனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.