TNPSC Thervupettagam
October 11 , 2020 1386 days 568 0
  • 2020 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசானது உலக உணவுத் திட்டத்திற்கு (WFP - World Food Programme) வழங்கப் படுகின்றது.
  • இது பட்டினியை எதிர்த்துப் போராடுவதற்கான அதன் முயற்சிகளையும் பிரச்சினை ஏற்பட்டுள்ள பகுதிகளில் அமைதிக்கான நிலையை ஏற்படுத்துவதில் அதன் பங்களிப்பையும் அங்கீகரிக்கின்றது.
  • இது பட்டினியைப் போர் மற்றும் பிரச்சினையின் ஆயுதமாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான முயற்சியின் உந்து சக்தியாகத் திகழ்கின்றது.
  • இந்தத் திட்டமானது 1960 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட உணவு மற்றும் வேளாண் அமைப்பின்படி 1963 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டது.
  • இது அவசரகாலச் சூழ்நிலைகளில் உணவு உதவியை அளிப்பதையும் உணவுப் பாதுகாப்பிற்கான தாங்கு தன்மையைக் கட்டமைப்பதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • 2008 ஆம் ஆண்டில், WEP ஆனது செயல்பாட்டிற்கான கொள்முதல் என்ற ஒரு திட்டத்தை ஒருங்கிணைத்தது.
  • இது வேளாண் சந்தையை அணுகுவதற்குச் சிறுநில விவசாயிகளுக்கு வாய்ப்பளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்