ஜப்பானிய அமைப்பான நிஹோன் ஹிடான்கிவிற்கு அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்தை அடைவதற்கான பெரு முயற்சிகளுக்காக வேண்டி 2024 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டு வீச்சுகளில் இருந்து தப்பியவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
1956 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நிஹான் ஹிடாங்கியோ ஜப்பானில் அணு குண்டுகளில் இருந்து தப்பியவர்களின் மிகப்பெரிய மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க அமைப்பாகும்.
கடந்த ஆண்டு, 2023 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு ஆனது, தற்போது சிறையில் இருக்கும் ஈரானிய ஆர்வலர் நர்கீஸ் முகமதிக்கு வழங்கப்பட்டது.