TNPSC Thervupettagam

அமைதித் திட்டம் 2018

June 10 , 2018 2264 days 667 0
  • அமைதித் திட்டம்-2018 (Peace Mission 2018) எனும் கூட்டு இராணுவப் போர் பயிற்சியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (Shanghai Cooperation Organisation -SCO) உறுப்பு நாடுகள் பங்கேற்க உள்ளன.
  • இந்த அமைதி திட்டம் எனும் கூட்டுப் போர் பயிற்சியானது ஆண்டிற்கு இரு முறை (Biannual) நடத்தப்படுகின்ற, பன்னாட்டு கூட்டுப் போர் பயிற்சியாகும் (Multinational drills).

  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் எட்டு உறுப்பு நாடுகளிடையே தீவிரவாத எதிர்ப்பு செயல்பாடுகளில் ஒத்துழைப்பையும், ஒருங்கிணைப்பையும் மேம்படுத்துவதை இந்தப் போர் பயிற்சி நோக்கமாகக் கொண்டது.
  • இக்கூட்டுப் போர் பயிற்சியில் முதல் முறையாக இந்தியா மற்றும் பாகிஸ்தானுடைய இராணுவங்கள் பங்கேற்க உள்ளன. எனவே இக்கூட்டுப் போர் பயிற்சியானது இரு அண்டை நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு இடையேயான பதற்றத்தைத் தணிக்கும். மேலும் நேர்மறையான கலந்துரையாடல் தொடர்புகளை (Positive Interactions) மேம்படுத்தும்.
  • SCO அமைப்பின் கடைசிக் கூட்டுப் போர் பயிற்சியானது 2016-ஆம் ஆண்டு செப்டம்பரில் கிர்கிஸ்தானில் நடைபெற்றது.
  • தற்போது நடைபெற உள்ள 2018 ஆம் ஆண்டின் SCO-வினுடைய அமைதி திட்டம் கூட்டுப் போர் பயிற்சியானது இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு முதல் கூட்டுப் போர் பயிற்சியாகும். ஏனெனில் இவ்விரு நாடுகளும் 2017-ல் தான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முழு உறுப்பினராயின.
  • இரு நாடுகளின் இராணுவங்களும் இதற்குமுன் ஐநாவின் அமைதிகாப்புப் படையின் திட்டங்களில் (United Nations peacekeeping missions) பணிபுரிந்த போதும், சுதந்திரத்திற்குப் பிறகு தற்போதுதான் முதன் முறையாக ஒன்றாக ஓர் கூட்டுப் போர் பயிற்சியில் பங்கேற்க உள்ளன.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்