அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா- பறவைகள் கணக்கெடுப்பு
January 7 , 2023 693 days 373 0
டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட முதல் பறவை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை இந்தக் கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது.
இந்த கணக்கெடுப்பில் 141 இனங்களை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 17 புதிய இனங்களாகும்.
இதுவரை அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவில் 175 வகையான பறவை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
2006 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 139 பறவை இனங்கள் அடையாளம் காணப்பட்டன.
2014 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட இனங்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்தது.
இதன் முதல் கணக்கெடுப்பு 1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் நடத்தப்பட்டது.
அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவினை தாவரவியலாளர் ராபர்ட் வைட் என்பவர் முதன்முதலாக 1847 ஆம் ஆண்டில் ஆய்வு செய்தார்.
இந்தப் பூங்காவானது, தென்னிந்தியாவின் ஐந்தாவது உயரமான சிகரமான முகூர்த்தி சிகரத்தின் அருகாமையில் அமைந்துள்ளது.