தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஏழு கிராமங்களில் வெறும் விளக்குகள் மட்டும் ஏற்றி, சத்தம் இல்லாத வகையில் தீபாவளி விழாவைக் கொண்டாடினர்.
இது அருகில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் உள்ள பறவைகளைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படுகிறது.
இந்தக் கிராமங்கள் ஆனது, ஈரோட்டில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள வடமுகம் வெள்ளோட்டைச் சுற்றி அமைந்துள்ளன.
ஆயிரக்கணக்கான உள்ளூர்ப் பறவை இனங்கள் மற்றும் பிற பகுதிகளில் இருந்து வலசை வந்த பறவைகள் அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இப்பகுதியில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பதற்காக வேண்டி இந்தச் சரணாலயத்திற்கு வருகை தருகின்றன.
செல்லப்பம்பாளையம், வடமுகம் வெள்ளோடு, செம்மாண்டம்பாளையம், கருக்கன் காட்டு வலசு, புங்கம்பாடி மற்றும் இரு கிராமங்கள் அமைதியான முறையில் தீபாவளி கொண்டாடும் வழக்கத்தினை நிலை நாட்டியுள்ளன.