TNPSC Thervupettagam

அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான இந்திரா காந்தி பரிசு 2021

November 26 , 2022 604 days 320 0
  • முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, 2021 ஆம் ஆண்டின் அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான இந்திரா காந்தி பரிசை கல்வித் துறையில் செயலாற்றி வரும் பிரதாம் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கினார்.
  • நாட்டின் குழந்தைகளுக்கு, குறிப்பாக கோவிட்-19 பெருந்தொற்று காலத்தின் போது தரமான கல்வியை வழங்குவதனை உறுதி செய்வதில் பிரதாம் அமைப்பின் பணியை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
  • பெருந்தொற்று காலத்தின் மத்தியில் பள்ளிகள் மூடப்பட்ட போதும், குழந்தைகள் கல்வி கற்பதற்கு ஏதுவான வகையில் கல்வியை வழங்குவதற்கு எண்ணிமத் தொழில் நுட்பத்தையும் பிரதாம் நிறுவனம் பயன்படுத்தியது.
  • இந்த அறக்கட்டளையின் வருடாந்திரக் கல்வி நிலை அறிக்கையானது (ASER), மூன்று கண்டங்களில் உள்ள 14 நாடுகளில் உள்ள கல்வி சார்ந்த திட்ட விளைவுகள் மற்றும் கற்றல் குறைபாடுகளை மதிப்பிடுவதற்கு ஒரு முன்மாதிரியாக செயல்படுகிறது.
  • அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான இந்திரா காந்தி பரிசு, இந்திரா அவர்களின் இலட்சியங்கள் மற்றும் குறிக்கோள்களை முன்மாதிரியாகக் கொண்ட நபர்களுக்கு வழங்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்