TNPSC Thervupettagam

அமைதி ஒப்பந்தம்

March 4 , 2020 1635 days 561 0
  • கத்தாரில் உள்ள தோஹாவில் “ஆப்கானிஸ்தானில் அமைதியைக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம்” என்ற ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் தலிபானும் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்த ஒப்பந்தமானது அமெரிக்காவின் மிக நீண்ட காலப் போரை முடிவுக்குக் கொண்டு வர வழிவகுக்கும்.
  • இந்த ஒப்பந்தத்தின் சிறப்பம்சங்கள்:
    • இராணுவத் துருப்புக்களைத் திரும்பப் பெறுதல்: அமெரிக்கா, அதன் கூட்டணி நாடுகள் மற்றும் பங்காளர் நாடுகள் ஆகியவற்றைச் சேர்ந்த அனைத்து வித இராணுவப் படைகளையும் திரும்பப் பெறுவதற்கான 14 மாத கால காலக் கெடுவை இது ஏற்படுத்தியுள்ளது.
    • கைதிகளின் விடுதலை: ஆப்கானிஸ்தான் – தலிபான் ஆகியவற்றிற்கிடையேயான பேச்சுவார்த்தைகளின் முதலாவது நாளில் “5,000 தலிபான் கைதிகளும் 1,000 குடிமக்களும் (அரசுத் தரப்பில்)" விடுவிக்கப்பட வேண்டும் என்றும் இந்த ஒப்பந்தம் கோருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்