பாரத் ஸ்டேட் வங்கி (SBI), HDFC வங்கி மற்றும் ICICI வங்கி ஆகியவை அமைப்பு ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளாக (SIB) இந்திய ரிசர்வ வங்கியினால் வகைப் படுத்தப் பட்டுள்ளன.
SBI மற்றும் HDFC ஆகிய வங்கிகள், 2025 அம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கூடுதல் மூலதனக் காப்பு நிதியினைப் பேண வேண்டும்.
அமைப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகள் ஆனது, அவற்றின் அளவு மற்றும் வேறு சில அளவுருக்களின் காரணமாக வீழ்ச்சியடைய முடியாத அளவுக்கு மிகவும் பெரியதாகக் கருதப்படுகின்றன.
இந்திய ரிசர்வ் வங்கி ஆனது 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் முறையே SBI மற்றும் ICICI வங்கிகளை உள்நாட்டு அமைப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த சில வங்கிகளாக (D-SIBs) வகைப்படுத்தியது.
2017 ஆம் ஆண்டில், HDFC வங்கியும் D-SIB ஆக வகைப்படுத்தப்பட்டது.